Theme Check

மே 14 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. வெப்பநிலை காரணமாக அரசு முடிவு..!

மே 14 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. வெப்பநிலை காரணமாக அரசு முடிவு..!

மே 14 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. வெப்பநிலை காரணமாக அரசு முடிவு..!
X

மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, வரும் மே மாதம் 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாக காணப்படுகிறது.
Punjab Elections 2022: AAP's CM candidate Bhagwant Mann owns THESE luxury  cars | Mobility News | Zee News
அதன்படி, அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும், ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், கடும் வெப்ப நிலை காரணமாக வரும் 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

இதையடுத்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு வரும் மே மாதம் 14-ம் தேதி முதல் பஞ்சாப்பின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
Share it