தகிக்கும் கோடை வெயில்... உடல் சூட்டை எளிதாக குறைக்கும் வழிகள் !
தகிக்கும் கோடை வெயில்... உடல் சூட்டை எளிதாக குறைக்கும் வழிகள் !

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலம் தொடங்கும். இந்த ஆண்டும் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்வது அவசியமாகிறது.
இதற்கு என்ன வழி என்பது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
- கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்த வேண்டும்.
- வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடை, கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
- அடிக்கடி தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர், தர்பூசணி மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை நீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.
- குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும்
- வீட்டில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள், மறைப்பான்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
- வெயிலில் கடுமையான பணிகளை செய்யக்கூடாது
- உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது.
- உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழவகைகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தினமும் இளநீர் குடிப்பது நல்லது. இதிலுள்ள நியூட்ரியன்ட்ஸ் உங்களுக்கு எனர்ஜி அளிக்கும்.
- தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது உங்கள் உடல் சூட்டை தணித்து, உடல் சூடு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கும். அதிலும் எலுமிச்சையுடன் இயற்கை இனிப்பான தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம்.
- சந்தனப்பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து உங்கள் நெற்றிப் பகுதியில் அப்ளை செய்து 15-20 நிமிடம் கழித்துக் கழுவலாம்.
- ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிது புதினா இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து, ஆறியதும் அதனுடன் தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
- கோடையின் வரப்பிரசாதமே தர்பூசணி தான். இது உடல் சூட்டைக் குறைப்பதோடு, உடல் கழிவுகளையும் வெளியேற்றும். மோர் அடிக்கடி அருந்தலாம்
- இந்த சமயத்தில் தண்ணீர் வரம். உடலை வறண்டுப் போக விடாமல் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு தம்ளர் நீராவது குடிப்பது அவசியம். அதோடு காலை மாலை இரண்டு வேளையும் குளிர்ந்த நீரால் குளிக்கவும்.
நமது உடலை குளிர்ச்சியாக்கினாலே போதும், மனதும் செயல்பாடுகளும் தானாக மாறும். சாதாரணமாகவே உடல் சூடு கொண்டவர்களுக்கு, இந்த கோடை ஒரு பெருங்கொடுமை தான். ஆனால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் இதனை எளிதில் கடந்துவிடலாம்.
newstm.in
Tags:
Next Story