Theme Check

சுண்டல் தகராறு.. டாஸ்மாக் பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு..!

சுண்டல் தகராறு.. டாஸ்மாக் பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு..!

சுண்டல் தகராறு.. டாஸ்மாக் பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு..!
X

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு மதுபான கடை பார் உள்ளது. இங்கு, வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது, பாரில் வாங்கிய சுண்டலுக்கு பாண்டியராஜன் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பாரில் பணிபுரியும் அங்குசாமி என்பவர் பாண்டியராஜனிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு, “நான் வீரபாண்டியில் பெரிய ஆள்.. என்னிடமே நீ பணம் கேட்கிறாயா..?” என்று பாண்டியராஜன் மிரட்டியுள்ளார். இதற்கு பயப்படாத அங்குசாமி, “பணத்தை கொடுத்துவிட்டு வேலையை பார்” என்று கூறியுள்ளார். இதனால், பணத்தை கொடுத்துவிட்டு பாண்டியராஜன் சென்றுள்ளார்.

பின்னர், இரவு 8 மணிக்கு தனது நண்பர்கள் 2 பேரை கூட்டிக் கொண்டு பாருக்கு வந்த பாண்டியராஜன், பார் பணியாளர் அங்குசாமியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட கைகலப்பில், அங்குசாமியின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அங்குசாமி கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it