19 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி செய்யும் சம்பவம்.. குஷியில் ரசிகர்கள் !!

19 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி செய்யும் சம்பவம்.. குஷியில் ரசிகர்கள் !!

19 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி செய்யும் சம்பவம்.. குஷியில் ரசிகர்கள் !!
X

சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல வெற்றிபடங்களை கொடுத்த இயக்குநர் சுந்தர்.சி அவ்வப்போது காமெடி படங்களை கொடுத்து ரசிகர்களை குலுங்க குலுங்க சிக்கவைப்பதில் முதன்மையாக உள்ளார். அவர் இயக்கிய அரண்மனை திரைப்படங்கள் பேய் படங்கள் என்றாலும் காமெடிக்கு குறைவு இருந்தது இல்லை.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டில் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்‌ஷன் என இரு படங்களை இயக்கிய சுந்தர் சி, கடந்த வருடம் அரண்மனை 3 படத்தை இயக்கினார். இந்த மூன்று படங்களும் பெரியளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனையடுத்து காஃபி வித் காதல் என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

yuvan

இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா சர்மா, டிடி, ரைஸா வில்சன், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா ரெடின் கிங்ஸ்லி போன்றோர் நடித்துள்ளார்கள். இதில் இருந்தே இப்படத்தில் காமெடி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் யூகிக்க தொடங்கிவிட்டனர். மேலும் இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணிசெய்துள்ளார். இது சாதாரண கூட்டணி இல்லை. இன்றும் ஏன் இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் மக்களை சிரிக்கவைக்கும் வின்னர் பட கூட்டணி என்பதை மறந்துவிடகூடாது.

உனக்காக எல்லாம் உனக்காக, வின்னர் படங்களுக்குப் பிறகு 19 ஆண்டுகளுக்கு கழித்து இந்தப் படத்தின் மூலம் சுந்தர் சி-யுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. காஃபி வித் காதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

coffie with kadhal
newstm.in


Tags:
Next Story
Share it