சூப்பர் அறிவிப்பு! 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!!
சூப்பர் அறிவிப்பு! 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.
தேர்தல் 19 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஞாயிறு வழக்கம்போல் விடுமுறை. வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

