சூப்பர் அறிவிப்பு! தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான கட்டணம் குறைவு!!
சூப்பர் அறிவிப்பு! தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான கட்டணம் குறைவு!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனர்களுக்காக ‘Vaxi Fare’ என்ற ஒரு புதிய திட்டத்தை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய விரும்புவோர் அடிப்படை விலையில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வழியாக டிக்கெட் வாங்கப்படும் அல்லது முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். மேலும், டிக்கெட்டுகள் 15 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த இரண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. வேறு தளம் வழியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தால் தள்ளுபடி கிடைக்காது.அதுமட்டுமின்றி ‘Vaxi Fare’ திட்டம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இந்தியாவுக்குள் இயங்கும் அதாவது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
பயணிகள் இந்த சலுகையைப் பெறுவதற்கு கோவிட் வாக்சின் செலுத்தி கொண்ட சான்றை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும், இல்லை என்றால் தள்ளுபடி ரத்து செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுக்கான முழு விலையை செலுத்த வேண்டும்.
newstm.in

