Theme Check

சூப்பர் அறிவிப்பு! இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

சூப்பர் அறிவிப்பு! இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

சூப்பர் அறிவிப்பு! இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!!
X

நாளை வாக்குப்பதிவு என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்லும் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12,604 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் உள்ள 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

school leave

இந்நிலையில் இன்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்பதால், 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு செல்கிறார்கள் என்றால் அந்தப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார். அதே போல் வேலூர் மாவட்டத்திலும் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school leave

அதே நேரத்தில் 50%க்கும் குறைவான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றிருந்தால், அந்தப்பள்ளி வழக்கம் போல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it