சூப்பர் அறிவிப்பு! மெட்ரோ ரயிலில் ஃபோட்டோஷூட் நடத்த அனுமதி!!
சூப்பர் அறிவிப்பு! மெட்ரோ ரயிலில் ஃபோட்டோஷூட் நடத்த அனுமதி!!

மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருமண நிகழ்வுகளில் போட்டோஷூட்கள் தவிர்க்க முடியாதவை. அதிலும் கேரளா போன்ற மாநிலத்தில் திருமண செலவை விட போட்டோஷூட் செலவு அதிகம் இருக்கும். அந்த அளவுக்கு போட்டோஷூட்-க்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலை லாபகரமானதாக மாற்றும் நோக்கத்தில் கொச்சி மெட்ரோ திருமண போட்டோஷூட் நடத்தி அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டன.

தற்போது திருமண போட்டோஷூட்களுக்கு குறைவான கட்டணத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு மெட்ரோ ரயில் பெட்டிக்கு அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம்.
நிற்கும் ரயிலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஓடும் ரயிலுக்கு 8 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

3 மெட்ரோ ரயில் பெட்டிகள் வேண்டுமானால் நிற்கும் ரெயிலில் 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். ஓடும் ரெயிலுக்கு ரூ.17,500 செலுத்த வேண்டும். வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சேவை ரயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பு பல இடங்களில் புதிது புதிதாக போட்டோஷூட் எடுத்த கேரள இளைஞர்கள் இனி மெட்ரோ ரயிலில் தங்கள் திறமையை காட்டுவார்கள்.
newstm.in

