Theme Check

தமிழகத்தில் இன்றும் நாளையும்.. பயணிகளுக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும்.. பயணிகளுக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும்.. பயணிகளுக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு..!
X

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதில், சுமார் 2.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே, இன்றும் (17ம் தேதி), நாளையும் (18ம் தேதி) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் தலா 500 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வார இறுதி நாட்களில் ஏராளமானோர் வெளியூர் செல்வது வழக்கம். மேலும், நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால் வழக்கமான பயணிகளுடன் வாக்களிக்க செல்வோரும் பயணிப்பர்.

எனவே, இன்றும் நாளையும் சென்னையில் இருந்து 500 விரைவு பேருந்துகள் இயக்க உள்ளோம். அதேபோல், பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம்.

மேலும், மேற்கு மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவு பேருந்துகளை இயக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it