திருமணம் ஆகாதவர்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த சான்று போதுமானது !

திருமணம் ஆகாதவர்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த சான்று போதுமானது !

திருமணம் ஆகாதவர்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த சான்று போதுமானது !
X

தமிழகத்தில் கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் ‘திருமணமாகாதவா்’ என்ற சான்றிதழே போதுமானது என அறநிலையத் துறை தெரிவித்தது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றிதழ்களுடன் முதல் திருமண சான்றும்”கோரப்பட்டு வந்தது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையானது முதல் திருமணச் சான்றுக்கு”பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும்‘திருமணமாகாதவா்’என்ற சான்றை பெற்றுக் கொள்ள தெளிவுரை வழங்கியுள்ளது.

marriage

ஆகவே, இனி வருங்காலங்களில் திருக்கோயில்களில் திருமணம் நடத்திட விரும்பும் பொதுமக்கள் ‘திருமணமாகாதவா்’”என்ற சான்றை இ-சேவை மையங்கள் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் சமா்ப்பிக்கலாம். இதுகுறித்து திருக்கோயில்களின் அலுவலா்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருக்கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களைத் தவிர, வருவாய்த் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழ்களை கோரினால், அறநிலையத்துறையின் தலைமை அலுவலக தொலைபேசி (044-28339999) எண்ணுக்கு தொடா்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம், என அதில் கூறப்பட்டுள்ளது.



newstm.in

Next Story
Share it