Theme Check

சூப்பர் திட்டம்! இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்!!

சூப்பர் திட்டம்! இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்!!

சூப்பர் திட்டம்! இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்!!
X

ஸ்கைட்ரைவ் நிறுவனத்துடன் ஜப்பானின் சுசுகி மோட்டார் இணைந்து இந்தியாவில் பறக்கும் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய வாகனச் சந்தையில் சுசுகி மோட்டார், மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனமாகும். அதே போல் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் ஸ்கைட்ரைவ் என்ற ஜப்பானிய நிறுவனம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இரண்டு நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அதிலும் அவற்றின் முதல் இலக்கும் இந்திய வாகனச் சந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.

flying car

இரண்டு பேர் பயணிக்கக்கூடிய பறக்கும் கார் தயாரிப்பில் ஸ்கைட்ரைவ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மாசு இல்லாத பேட்டரியில் இயங்கும் பறக்கும் கார் மாதிரியை அமெரிக்காவின் லாஸ்வேகாசில் நடந்த வாகன கண்காட்சியில் ஸ்கைட்ரைவ் அறிமுகம் செய்தது.

றக்கும் கார் தயாரிப்பு ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனத் தயாரிப்புடன் வானத்தையும் எட்டிப்பிடிக்க சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் திட்டம் நனவானால், பயணிகளின் பறக்கும் கனவு விரைவில் நனவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it