Theme Check

சூப்பர் திட்டம்! கைம்பெண்களுக்கு ஓய்வூதியம்!!

சூப்பர் திட்டம்! கைம்பெண்களுக்கு ஓய்வூதியம்!!

சூப்பர் திட்டம்! கைம்பெண்களுக்கு ஓய்வூதியம்!!
X

பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒரு திட்டம் வித்வா பென்சன் யோஜனா. விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வந்தாலும் பென்சன் தொகை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் கணவனை இழந்த கைம்பெண்களுக்கு பென்சன் கிடைக்கும்.

18 முதல் 60 வயது வரை உள்ள விதவை பெண்களுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கும். கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

widow-pension-scheme

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கசில தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக, இந்தத் திட்டம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு மட்டுமே. வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தையும் பயன்படுத்தாத பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, கணவரின் இறப்புச் சான்றிதழ், மொபைல் எண், இருப்பிட சான்றிதழ், வங்கி கணக்கு பாஸ்புக், வயது சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

widow-pension-scheme

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it