90'ஸ் கிட்சுகளின் சூப்பர்ஹீரோ.. திரைப்படமாகும் ‘சக்திமான்’.. டீசர் வெளியீடு !

90'ஸ் கிட்சுகளின் சூப்பர்ஹீரோ.. திரைப்படமாகும் ‘சக்திமான்’.. டீசர் வெளியீடு !

90ஸ் கிட்சுகளின் சூப்பர்ஹீரோ.. திரைப்படமாகும் ‘சக்திமான்’.. டீசர் வெளியீடு !
X

90-களில் வெளிவந்து பிரபலமான 'சக்திமான்' தொலைக்காட்சி தொடர் வைத்து சூப்பர்ஹீரோ திரைப்படம் ஒன்று தயாராகிறது.

90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான தொடர் 'சக்திமான்'. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்று அறியப்படும் 'சக்திமான்' செப்டம்பர் 1997-ம் ஆண்டு ஆரம்பித்து மார்ச் 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்தத் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்திருந்தார்.

sakthiman Shaktimaan

அதாவது பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற சாதாரண மனிதர் மற்றும் 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தத் தொடர் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த தொடர் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சக்திமான் தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது. சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் சக்திமான் சூப்பர்ஹீரோ படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

Shaktimaan

இந்த திரைப்படத்தில் இந்திய முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ள சோனி பிக்சர்ஸ் அசத்தலான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 'மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிரம்பியுள்ளதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது' என டீசரில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதில் சக்திமானாக பிரபல பாலிவுட் ஒருவரை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



newstm.in

Tags:
Next Story
Share it