Theme Check

மூடநம்பிக்கை.. 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூர தாய் !

மூடநம்பிக்கை.. 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூர தாய் !

மூடநம்பிக்கை.. 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூர தாய் !
X

குழந்தையின் கொலை செய்து ஆற்றில் வீசிய தாயாரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ராசாபுரத்தில் மகேஷ்வரன்- லதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது குழந்தை ராகுல் பிறந்து நான்கு மாதமே ஆகிறது. இந்த நிலையில், தம்பதியருக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி குழந்தை ராகுலை வீட்டில் படுக்க வைத்து விட்டு இயற்கை உபாதைக்காக லதா வெளியே சென்று விட்டு வந்த பார்த்த போது குழந்தை காணாமல் போயிருந்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் அருகே இருந்த பாலாறு ஆற்றில், அமலை செடிகளுக்கு மத்தியில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
baby girl arrested
குழந்தை இறப்புக்கான காரணத்தை கண்டறிவதில் குழந்தைக்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர், குழந்தை இறந்த நேரம் மற்றும் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாய் லதாவிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மீது சந்தேகம் எழுந்ததால், அடுத்து நடத்திய தீவிர விசாரணையில் லதா அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

குழந்தை பிறந்தது முதலே மனக்கஷ்டம், உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், ஜாதகத்தில் குழந்தையின் நேரம் சரியில்லை என்றும் தெரியவந்ததால் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டதாக ஒப்புக்கொண்டு லதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர், பெற்ற குழந்தையை கொன்ற தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


newstm.in

Next Story
Share it