Theme Check

ஆச்சர்யம்! போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் திடீர் நீர் ஊற்று!!

ஆச்சர்யம்! போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் திடீர் நீர் ஊற்று!!

ஆச்சர்யம்! போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் திடீர் நீர் ஊற்று!!
X

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் இணைகின்ற இடத்தில், போக்குவரத்து காவல்துறை சார்பில், சோலார் பொருத்தப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரியும் கம்பம் ஒன்று நட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கம்பத்தில் இருந்து தண்ணீர், நீருற்று போல பீய்ச்சியடித்தது. போக்குவரத்து கம்பத்தில் எப்படி தண்ணீர் வந்தது என்று அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் இரவோடு இரவாக அந்த கம்பத்தை அங்கிருந்து பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்காக துளையிட்ட பகுதியில் இருந்து தண்ணீர் ஆறாக ஓடி வீணானது.

trc signal water

போக்குவரத்து சிக்னல் அமைத்த இடத்தில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியை எடுத்த நபர்கள், இதையறியாமல் அங்கு துளையிட்டு போக்குவரத்து சிக்னல் கம்பத்தை நட்டுவிட்டனர். அப்போது குடிநீர் விநியோகம் செய்யும் நேரம் இல்லை என்பதால் அவர்களுக்கு தெரியவில்லை.

மாலையில் குடிநீர் வழங்கியபோது, சிக்னல் கம்பத்தின் வழியே தண்ணீர் பீய்ச்சியடித்துள்ளது. தற்போது அந்த குழாயும் பெயர்த்து எடுக்கப்பட்டு விட்டதால் பலநூறு லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியுள்ளது.

newstm.in

Next Story
Share it