சூர்யா, ரஜினியை தொடர்ந்து கமல்.. உயர்ந்து வரும் உதயநிதி! !!

சூர்யா, ரஜினியை தொடர்ந்து கமல்.. உயர்ந்து வரும் உதயநிதி! !!

சூர்யா, ரஜினியை தொடர்ந்து கமல்.. உயர்ந்து வரும் உதயநிதி! !!
X

தமிழக முதலமைச்சரின் மகனும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி, தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக பெரிய படங்களின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கி வருகிறார்.

ரஜினியின் அண்ணாத்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை அவர் தான் வாங்கினர். சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையையும் வாங்கியிருந்தது. விரைவில் வெளிவரவிருக்கும் கமலின் விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
kamal vikram
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆக்சன் படமான இப்படத்தில் மூன்று முக்கிய நாயகர்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமலின் இதுவரையான படங்களின் விற்பனையை விக்ரம் தாண்டும் என கருதப்படுகிறது. தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எத்தனை கோடிகளுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஜுன் 3 ஆம் தேதி விக்ரம் திரைக்கு வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it