Theme Check

கணவன் மீது சந்தேகம்.. கல்லை கட்டி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!

கணவன் மீது சந்தேகம்.. கல்லை கட்டி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!

கணவன் மீது சந்தேகம்.. கல்லை கட்டி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!
X

சேலம் மாவட்டம் கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவருடைய மனைவி மரகதம் (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

செல்வகணபதி (7), கோகுலக்கண்ணன் (5) என்ற 2 மகன்கள் இருந்தனர். பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிரபாகரனுக்கும், அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக, அவரது நடத்தையில் மனைவி மரகதம் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணை கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். எனினும் பிரபாகரனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையேயான தொடர்பு நீடிப்பதாக மரகதம் சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பிரபாகரன் தனது நிறுவனத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது. திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது மனைவி மற்றும் மகன்களை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மரகதத்தின் செருப்பு மிதந்துள்ளதை பார்த்தார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றுக்குள் இருந்து 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

மரகதத்துக்கு நீச்சல் தெரியும் என்பதால் உயிர் தப்பி விடக்கூடாது என்பதற்காக உடலில் கல்லைக் கட்டிக்கொண்டு 2 மகன்களை அணைத்துக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மரகதம் மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
Share it