சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்லப்படும் டி.ராஜேந்திர்.. சிம்பு அறிக்கை !!

சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்லப்படும் டி.ராஜேந்திர்.. சிம்பு அறிக்கை !!

சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்லப்படும் டி.ராஜேந்திர்.. சிம்பு அறிக்கை !!
X

எனது தந்தை குறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்ன பாதிப்புக்கு அவர் சிகிச்சை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில், இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவும் நிலையில், அந்த வதந்திகளுக்கு நடிகர் சிம்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தை குறித்துத் தொடர்ந்து பரவும் வதந்திகள் எதையும் யாரும் நம்ப வேண்டாம்.

dfs

என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி, என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

sdf

இதனிடையே, டி. ராஜேந்தர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 1980 களில் நிறைய படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் டி ராஜேந்தர். இவர் பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், திரைப்பட விநியோகஸ்தர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றவர்.

newstm.in

Tags:
Next Story
Share it