Theme Check

2ஆவது திருமணம் செய்கிறார் டி.இமான்... மணப்பெண் யார் தெரியுமா?

2ஆவது திருமணம் செய்கிறார் டி.இமான்... மணப்பெண் யார் தெரியுமா?

2ஆவது திருமணம் செய்கிறார் டி.இமான்... மணப்பெண் யார் தெரியுமா?
X

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என டி.இமான் சினிமாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இவருக்கும் மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக இமான் தனது ட்விட்டர் மூலம் அறிவித்தார். அதில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

d iman

எனது நலன்மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைச் சேர்ந்த உமா என்பவருக்கும் டி. இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமணம் தொடர்பாக இரு வீட்டு பெரியவர்கள் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது என்றும் கூறப்படுகிறது. விரைவில் டி.இமானே இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.


newstm.in

Next Story
Share it