இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – முக்கிய விவரங்கள்!!
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – முக்கிய விவரங்கள்!!

தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாக தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும். முகக்கவசம் கட்டாயம். ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது. முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 3ஆம் பாலினத்தவர்கள் என்று 22,02,942 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். 9 மணிக்கு ஓஎம்ஆர் தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது. செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை ஓஎம்ஆர் தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். இடதுகை பெருவிரல் ரேகையை தேர்வு முடிந்த பின் ஓஎம்ஆர் தாளில் பதிவிட வேண்டும்.
ஓஎம்ஆர் தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது. ஓஎம்ஆர் தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
ஓஎம்ஆர் தாளில் ஒரு கட்டத்தை தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது. விடைதெரியாத கேள்விக்கு ஓஎம்ஆர் தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும். இவற்றை பின்பற்ற வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
newstm.in

