தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா.. புதுச்சேரி பேருந்துகளில் இலவச பயணம்..!
தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா.. புதுச்சேரி பேருந்துகளில் இலவச பயணம்..!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவையை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை புதுச்சேரி மாநிலம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் மகளிருக்கு இலவச பேருந்து சேவை திட்டம் கொண்டுவரப்படும் என்று திமுகவினர் உறுதி அளித்துள்ளனர்.
இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், மணவெளி தொகுதி திமுக சார்பில் இன்று ஒரு நாள் முழுவதும், புதுச்சேரியில் இருந்து பாகூர் பகுதிக்கு தனியார் பேருந்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மாநில அமைப்பாளருமான இரா.சிவா தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் பயணம் செய்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் இதேபோல் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

