Theme Check

விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்..!!

விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்..!!

விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்..!!
X

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் வருகிற 10-ம் தேதி நடைபெறவுள்ளது. 15 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநில தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையும். கூட்டணிக் கட்சியான திமுக சிறப்பாக செயல்படுகிறது. எனவே அவர்களை பாராட்டுகிறோம் என்று கூறினார்.

இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விகளும் எதிர்பார்ப்பும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் எழுந்துள்ளது.

Next Story
Share it