மோடி பேசிய வரியில் இருந்து விமர்சன வரியை எடுத்த தமிழக எம்.பி.!
மோடி பேசிய வரியில் இருந்து விமர்சன வரியை எடுத்த தமிழக எம்.பி.!

மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், அதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்தர்.
முன்னதாக தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது என ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரதமர், தமிழகத்தில் 1962க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை என்று சாடினார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநில மீதிது போல் பிரிதில்லையே என்று பாரதியின் வரியை குறிப்பிட்டார். ஆனால் பிரதமரின் இந்த மேற்கோளை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மோடி பேசிய வரிகளில் இருந்தே சு.வெங்கடேசன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “மன்னும இமயமலை எங்கள் மலையே ! மாநில மீதிது போல் பிரிதில்லையே “ என்னும் பாரதியின் பாடலை குறிப்பிட்டார் பிரதமர்.
மாநிலத்துக்கும் இடமில்லை பாரதிக்குமிடமில்லை குடியரசு தின அணிவகுப்பில் என்பதை சொல்ல மறந்துவிட்டார் என சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“மன்னும இமயமலை எங்கள் மலையே !
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 7, 2022
மாநில மீதிது போல் பிரிதில்லையே “ என்னும் பாரதியின் பாடலை குறிப்பிட்டார் பிரதமர்.
மாநிலத்துக்கும் இடமில்லை
பாரதிக்குமிடமில்லை குடியரசு தின அணிவகுப்பில் என்பதை சொல்ல மறந்துவிட்டார். #பாரதி #Bharathi #Modi #RepublicDay #Parliament pic.twitter.com/6ErEug7TiC
newstm.in

