தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம்!!

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம்!!

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம்!!
X

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.

Dhanalaxmi

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளவதாக இருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், காமன்வெல்த் தொடரை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருத்து சோதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு ஆகிய தடகள வீராங்கனைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Dhanalaxmi

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார். அந்த தொடரில் ஹிமா தாஸ், டுடி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது.

Next Story
Share it