தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!!
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!!

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தொடர் ஓட்டம், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாடு தங்கம் வென்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
61ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 6.73 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் காமல்வெல்த் வாய்ப்பையும் உறுதி செய்தார்.
இதில் தமிழக வீராங்கனைகள் உமா மகேஸ்வரி மற்றும் ஹர்ஷினி முறையே ஆறாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். அதே போல் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் உத்தரப்பிரதேச வீராங்கனை அன்னு ராணி 60.97 மீட்டர் ஈட்டி எறிந்து காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி பந்தய தூரத்தை 13.62 வினாடியில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதில் மற்றொரு தமிழக வீராங்கனை தபிதா 14.09 வினாடியில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீரர் தஜிந்தர் பால் சிங் 20.34 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு பஞ்சாப் வீரர் கரன்வீர் சிங் 19.0 7 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ராஜஸ்தான் விரர் அக்ஷய் வெண்கல பதக்கத்தை தனதாக்கினார்.
newstm.in

