Theme Check

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்- ரூ.1000 உதவித்தொகை உள்பட புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு !!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்- ரூ.1000 உதவித்தொகை உள்பட புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு !!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்- ரூ.1000 உதவித்தொகை உள்பட புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு !!
X

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது. நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும் போது, எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

secretariate

அதேசமயம் எல்லோரும் பார்க்கும் வகையில், சட்டசபையில் பெரிய திரைகளில் பட்ஜெட் தாக்கல் ஒளிபரப்பப்படும். இதேபோல், பொதுமக்கள் பட்ஜெட் அறிவிப்புகளை அறிந்துகொள்ளும் விதமாக நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டான இதில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

secretariate

மகளிர் உரிமைத்தொகை, மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு, சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

தன்பின் அலுவல் ஆய்வு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்துவது என முடிவு செய்து, சட்டசபை நடக்க வேண்டிய தேதிகளை அறிவிக்கும்.

newstm.in

Next Story
Share it