Theme Check

தமிழக அமைச்சரவை முதல் முறையாக மாற்றம்..!!

தமிழக அமைச்சரவை முதல் முறையாக மாற்றம்..!!

தமிழக அமைச்சரவை முதல் முறையாக மாற்றம்..!!
X

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி கூறி விமர்சித்ததாக நேற்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான அடுத்தடுத்த சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் ராஜகண்ணப்பனுடைய இலாகா மாற்றத்திற்கு மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி தன்னை அவமானப்படுத்தினார் என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாகவே தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story
Share it