#FLASH NEWS:- நேதாஜி ராணுவப்படையில் பணியாற்றிய தமிழக வீரர் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் !!
#FLASH NEWS:- நேதாஜி ராணுவப்படையில் பணியாற்றிய தமிழக வீரர் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் !!

சுபாஷ் சந்திரபோஸின் தேசிய ராணுவப்படையில் பணியாற்றிய வீரர் வெள்ளைச்சாமி (98) காலமானார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனியில் உடல்நலக்குறைவால் K.R. வெள்ளைச்சாமி காலமானார். 98 வயதான வெள்ளைச்சாமி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசிய ராணுவப்படையில் ஒருவராக பணியாற்றி, பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில் வெள்ளைச்சாமி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏராளமான இந்திய இளைஞர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். தமிழகத்தில், சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜி தேசிய ராணுவப்படையில் இணைந்தனர்.
newstm.in

