தமிழ் துணை நடிகை காவல்துறையில் புகார்.. 4ஆவது திருமணம் காரணமா?
தமிழ் துணை நடிகை காவல்துறையில் புகார்.. 4ஆவது திருமணம் காரணமா?

நடிகை பவித்ரா லோகேஷ் தன்னை சில மீடியா நபர்கள் பின்தொடர்வதாக காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளார்.
கன்னட சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழ், கன்னட, தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கன்னட மாநில விருதினை பெற்றுள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் என்னும் படத்தில் நடித்திருந்தார்.
இவரது கணவர் சுசேந்திர பிரசாத் சகோதரர் ஆதி லோகேஷ் கன்னடத்தில் பிரபலமான நடிகர்கள். இவர் தற்போது நரேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வசித்து வருவதாகவும், இது நரேஷ்க்கு 4ஆவது திருமணம் என்றும் தகவல் சொல்லப்படுகிறது.
பவித்ராவின் நட்பிற்குப் பிறகு தான் கவலையில் இருந்து மீண்டதாகவும், பவித்ரா அவர்கள் தனக்கு நண்பனாகவும், வாழக்கைத் தோழராகவும், தத்துவவாதியாகவும், நலம் விரும்பியாகவும் இருக்கிறார் என நரேஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பவித்ரா காவல்துறையில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தன்னை சில பத்திரிக்கைத்துறையினர் பின்தொடர்வதாகவும், அதனால் மனநிம்மதியை இழந்து விட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார். ஏற்கனவே, இவர் சைபர் கிரைமில் தன்னுடைய பெயரில் போலியான கணக்குகள் இருப்பதாக புகாரளித்தும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நரேஷை திருமணம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய தனிப்பட்ட விசயத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை. அதை அவரே பார்த்துக்கொள்வார் என பவித்ரா லோகேஷ் கூறினார். இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்த பத்திரிகையாளர்கள் பின்தொடர்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தப்பியோடுவதாகவும் சொல்லப்படுகிறது.
newstm.in