Theme Check

தமிழர்கள்- மலையாளிகள் ஒரே மண்ணின் குழந்தைகள்.. சென்னையில் பினராயி விஜயன் பேச்சு !!

தமிழர்கள்- மலையாளிகள் ஒரே மண்ணின் குழந்தைகள்.. சென்னையில் பினராயி விஜயன் பேச்சு !!

தமிழர்கள்- மலையாளிகள் ஒரே மண்ணின் குழந்தைகள்.. சென்னையில் பினராயி விஜயன் பேச்சு !!
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், தனது பள்ளி- கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், புத்தகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.

stalin book

இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன். தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள்; நாங்கள் சகோதர, சகோதரிகள். இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத் தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார். படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது.

ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கையை புத்தகத்தில் எழுதியுள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் போராடி வருகிறார். மிசா கால கட்டத்தில் நானும் ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து, இந்த உயரத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பதிலும் திராவிட இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார். இவ்வாறு கூறினார்.


newstm.in

Next Story
Share it