Theme Check

உக்ரைன் வாழ் தமிழர்கள் உதவி கோரலாம்.. தமிழக அரசு தகவல்..!

உக்ரைன் வாழ் தமிழர்கள் உதவி கோரலாம்.. தமிழக அரசு தகவல்..!

உக்ரைன் வாழ் தமிழர்கள் உதவி கோரலாம்.. தமிழக அரசு தகவல்..!
X

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, உக்ரைனில் உள்ள வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளலாம் என, வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ‘உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் 044-28515288, 9600023645, 994025644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.nrtamil.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம்’ எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் [email protected] என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it