Theme Check

டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் - விசிக நிர்வாகி கைது!!

டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் - விசிக நிர்வாகி கைது!!

டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் - விசிக நிர்வாகி கைது!!
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் டாஸ்மார்க் கடையில் ஊழியர்களை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்பழகன் பணியாற்றி வருகின்றார். இவர் வசிக்கும் வெங்கடாம்பட்டி கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகின்றது. அங்கு அவ்வப்போது சென்று மதுபாட்டில் வாங்கியும், கட்சி வளர்ச்சி நிதிக்காக கடையில் பணம் வசூல் செய்வது என தொடர்ச்சியாக பணம் வாங்கியாகவும் கூறப்படுகிறது.

vck

இந்தநிலையில் அவர் நிர்வாகி ஒருவரிடம் மதுபாட்டில் மற்றும் பணம் வாங்கி வரச்சொல்லியதாகவும் அப்போது கடை ஊழியர்கள் கொடுக்க மறுப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கு சென்று அவர் டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டியுள்ளார். இதை செல்போனில் எடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதன்படி கடை ஊழியர்கள் கடையம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it