பள்ளியின் அருகில் டாஸ்மாக் கடை.. நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!
பள்ளியின் அருகில் டாஸ்மாக் கடை.. நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!

கோவையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தில் பொதுமக்களின் வாழ்வை அச்சுறுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் திறக்கப்பட உள்ளது.
அந்த இடத்திற்கு 50 அடி தூரத்திலேயே பள்ளி அமைந்துள்ளதால், மதுக்கடை அமைக்க ஆட்சேபனை தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story

