#BREAKING:- ஃபோர்ட் இந்தியாவை கைப்பற்றுகிறது டாடா மோட்டார்ஸ்.. ஒப்புதல் வழங்கியது அரசு..!

#BREAKING:- ஃபோர்ட் இந்தியாவை கைப்பற்றுகிறது டாடா மோட்டார்ஸ்.. ஒப்புதல் வழங்கியது அரசு..!

#BREAKING:- ஃபோர்ட் இந்தியாவை கைப்பற்றுகிறது டாடா மோட்டார்ஸ்.. ஒப்புதல் வழங்கியது அரசு..!
X

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தின் சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும், குஜராத் மாநிலம் சனந்திலும் இரண்டு ஆலைகள் இயங்கி வருகின்றன.

பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து நேரிடும் என அச்சம் எழுந்தது.

இதையடுத்து, ஃபோர்டு ஆலைகளை விலைக்கு வாங்க சில இந்திய நிறுவனங்கள் முயற்சித்தன. மேலும், ஃபோர்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகின. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டம் இல்லை என ஃபோர்டு தெரிவித்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி டீலை முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்குவதற்கு குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் ஃபோர்டு, டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:
Next Story
Share it