Theme Check

எளிய மக்கள் வாங்கும் டீ தூள், மேகி விலை உயர்வு!!

எளிய மக்கள் வாங்கும் டீ தூள், மேகி விலை உயர்வு!!

எளிய மக்கள் வாங்கும் டீ தூள், மேகி விலை உயர்வு!!
X

இந்தியாவில் நுகர்வோர்களால் அதிகம் வாங்கி பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களின் (FMCG) விலை உயர உள்ளதாக தெரிகிறது.

நாட்டின் தற்போதைய பணவீக்க சூழலுக்கு மத்தியில் இந்த FMCG நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக உள்ள நெஸ்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் விலை உயர்வை முன்னெடுத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இரு நிறுவனங்களும் டீ, இன்ஸ்டன்ட் காபி, நூடுல்ஸ் மற்றும் பால் விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பணவீக்கமே காரணம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

hul

HUL நிறுவனத்தின் வசமுள்ள ப்ரூ காபியின் விலை 3 முதல் 7 சதவிகிதம் வரை கூடுகிறது. தாஜ் மஹால் டீ 3.7 முதல் 5.8 சதவிகிதம் வரையிலும், ப்ரூக் பாண்ட் டீ 1.5 முதல் 14 சதவிகிதம் வரை விலை உயர இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல நெஸ்லே நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற உணவு பொருளான மேகி நூடுல்ஸ் 9 முதல் 16 சதவிகிதம் வரை விலை அதிகரிக்க உள்ளது. அதே போல நெஸ்லேவின் தயாரிப்பான பால் மற்றும் காபி தூள் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it