Theme Check

ஆசிரியர் தகுதித் தேர்வு – முக்கிய அறிவிப்பு!!

ஆசிரியர் தகுதித் தேர்வு – முக்கிய அறிவிப்பு!!

ஆசிரியர் தகுதித் தேர்வு – முக்கிய அறிவிப்பு!!
X

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, வரும் 14ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு, உரிய விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

teachers exam1

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் தெரிவித்துள்ள நிலையில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஆசிரியர்கள் சிலர் தகுதித் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it