Theme Check

2 நாட்களுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2 நாட்களுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2 நாட்களுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
X

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில், மே மாதத்தில் இது தொடரும் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் வெயில் இயல்பை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

ஆனால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் அதிக மழை பெய்தது. கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படி படியாக குறைந்து வருகிறது.
dsf
மழைக்கான வாய்ப்பு குறையும் வேளையில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாடு நிலபரப்பிற்குள் வரும் காற்று போதிய வலுவில்லாததால், உணர்வெப்பம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுகிறது.

குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதன் காரணமாக வெப்பநிலையில் இயல்பை விட 1℃ -2℃ வரை வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it