ரூ.20 லட்சம் செலவில் தாய்க்கு கோவில்!!
ரூ.20 லட்சம் செலவில் தாய்க்கு கோவில்!!

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் லட்சுமி (62). அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்டேனோகிராபராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர், தனது தாய்க்கு 20 லட்சம் ரூபாய் செலவில் கோவில் கட்டியுள்ளார். தாய் கன்னியம்மாள் சிலையை நிறுவி, தினமும் பூஜை செய்து வருகிறார். தந்தை ஆறுமுகம், தாயிடம் சண்டை போட்டு தனியாக விட்டுச்சென்றார்.

ஒரே மகளான தன்னை, தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். பல வீடுகளில் பாத்திரம் துலக்கி, படிக்க வைத்தார். தாயை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
தாய் மறைந்ததால், அவரது நினைவாக கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்தேன். என் தாயின் சிலையை, மாமல்லபுரம் ஸ்தபதி ஒருவர் வடித்து கொடுத்துள்ளார்.
கோவிலுக்குள் பிள்ளையார், நாகதேவதை, பாலமுருகன், வைஷ்ணவி, பிராமி மற்றும் நவக்கிரகங்கள் சிலைகளையும் வைத்துள்ளேன். பொதுமக்களும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
newstm.in

