Theme Check

மீண்டும் பதற்றம்... எம்எல்ஏ அலுவலகம் அடித்து நொறுக்கினர் !!

மீண்டும் பதற்றம்... எம்எல்ஏ அலுவலகம் அடித்து நொறுக்கினர் !!

மீண்டும் பதற்றம்... எம்எல்ஏ அலுவலகம் அடித்து நொறுக்கினர் !!
X

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே உள்ளார்.
இதற்கிடையே, சிவசேனா கட்சியை மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளார். இதனால் அவர் தனது ஆதரவாளர்களான 40க்கு மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
G
இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களைக் கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், புனேவில் உள்ள பாலாஜி நகரில் பராண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. தனாஜி சாவந்த் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர். இதேபோல், பல்வேறு பகுதிகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Newstm.in
Tags:
Next Story
Share it