கோவையில் பதற்றம்..!! வலிமை ரிலீசான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!!
கோவையில் பதற்றம்..!! வலிமை ரிலீசான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள படம் ‘வலிமை’. பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அதிகாலை முதலே பெரும்பாலான திரையரங்குகளின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடனமாடி ஆரவாரம் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
படம் பார்க்க ரசிகர்கள் குழுமியிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் லேசாக சேதமடைந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

