Theme Check

பயங்கரம்.. வீட்டில் வெடி விபத்து.. 7 பேர் உடல் சிதறி பலி: 10 பேர் படுகாயம்..!

பயங்கரம்.. வீட்டில் வெடி விபத்து.. 7 பேர் உடல் சிதறி பலி: 10 பேர் படுகாயம்..!

பயங்கரம்.. வீட்டில் வெடி விபத்து.. 7 பேர் உடல் சிதறி பலி: 10 பேர் படுகாயம்..!
X

பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நேற்று இரவு 11.45 மணி அளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், 3 வீடுகள் சேதமடைந்தன.
7 Killed, Several Injured After Explosion in Bihar's Bhagalpur - Anyfeed
இந்த சம்பவத்தில் இரண்டு மாடி வீடு இடிந்த நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
Live Updates, News, Headlines, Videos And More | The New Indian Express
இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் கணேஷ் மண்டல் என்கிற கணேஷ் சிங் (60), நந்தினி (30) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், வெடிவிபத்து ஏற்பட்ட குடும்பம் பட்டாசு தயாரிப்பதில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story
Share it