Theme Check

சென்னையில் பயங்கரம்.. ஓட ஓட விரட்டி திமுக நிர்வாகி படுகொலை..!

சென்னையில் பயங்கரம்.. ஓட ஓட விரட்டி திமுக நிர்வாகி படுகொலை..!

சென்னையில் பயங்கரம்.. ஓட ஓட விரட்டி திமுக நிர்வாகி படுகொலை..!
X

சென்னையின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் திருவல்லிக்கேணி பகுதி பல்லவன் சாலையில், திமுக நிர்வாகியான மதன் (32) என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, கையில் பட்டாக் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், மதனை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மதன் ஓடி நிலையிலும் விடாமல் துரத்திய கும்பல், அவரது தலை, கை, மார்பு பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மதன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவத்தால் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறி அடித்து ஓடினர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், மதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உட்கட்சிப் பூசல் காரணமாக மதன் கொலை செய்யப்பட்டாரா, தேர்தல் முன்விரோதம் போன்ற வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் திமுக பிரமுகர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it