இலங்கைக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டது - முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டது - முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!

இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு கோடி கிலோ அரிசி; 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 உயிர் காக்கும் மருந்து பொருட்கள்; 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து லட்சம் டன் பால் பவுடர் ஆகியவை முதல் கட்டமாக அனுப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து முதற்கட்டமாக இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் TAN BINH 99 என்ற கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
முதற்கட்டமாகக் இந்த கப்பலில், 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடர், ரூ.8.85 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்பட, ரூ.123 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல் 44 மணி நேரம் பயணித்து இலங்கையைச் சென்றடையும். இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

