Theme Check

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்!!

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்!!

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்!!
X

இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம் நீட்டிய தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்நாட்டிற்கு உதவும் வகையில் 40 டன் அரிசி, 137 வகை மருந்துகள், 500 டன் பால்பவுடர் ஆகியவை வழங்கப்படும் எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 4 ..எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இக்குழு, நிவாரண பொருட்கள் பணியை மேற்கொண்டது.

cm 1

இதைத்தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் இருந்து மே18ஆம் தேதியன்று அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பலை ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம் நீட்டிய தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2 பில்லியன் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் இலங்கைக்கு இன்று வந்துசேர்ந்துள்ளன. ஆதரவு கரம் நீட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it