நாட்டு வெடிகுண்டு தயாரித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்.. விரல்கள் துண்டான விபரீதம்..!
நாட்டு வெடிகுண்டு தயாரித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்.. விரல்கள் துண்டான விபரீதம்..!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிஜூ (40). கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சிபிஐ (எம்) தொண்டர் தன்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய இவர் மீது மேலும் 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பிஜூ நேற்று வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பிஜூவின் இடது கையில் இரு விரல்கள் துண்டானது. இதைத் தொடர்ந்து, மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, வெடிபொருட்கள் தயாரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் பிஜு மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

