Theme Check

22 யூடியூப் சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு..!!

22 யூடியூப் சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு..!!

22 யூடியூப் சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு..!!
X

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் உள்ளிட்டவை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. தொடர்ந்து ஜனவரி மாதம் 35 யூடியூப் சேனல்களை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது.

மேலும் உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியதாக அறிவிப்பு வெளியானது.

அந்த வகையில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதால், மேலும் 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 18 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் இருந்தும், 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்தும் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 3 ட்விட்டர் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it