Theme Check

உங்கள் பலவீனத்தால் உக்ரைன் மக்கள் உயிரிழக்கின்றனர்.. நேட்டோ மீது ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்

உங்கள் பலவீனத்தால் உக்ரைன் மக்கள் உயிரிழக்கின்றனர்.. நேட்டோ மீது ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்

உங்கள் பலவீனத்தால் உக்ரைன் மக்கள் உயிரிழக்கின்றனர்.. நேட்டோ மீது ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்
X

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகள் அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நேட்டோ அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உருக்கமாகப் பேசினார்.

உக்ரைனில் இனி உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் நேட்டோ அமைப்பின் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும். உக்ரைனின் நகரங்களிலும் கிராமங்களிலும் ரஷ்ய குண்டு மழையைப் பொழிய நேட்டோ பச்சைக் கொடி காட்டியுள்ளது. நீங்கள் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க மறுப்பதால் நஷ்ய படைகள் மறைமுகமாக பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

russia attack

நேட்டோ குழுமம் எங்களுக்குச் செய்த ஒரே உதவி 50 டன் டீசலை உக்ரைனுக்கு அனுப்பியது மட்டுமே. இதைவைத்து புடாபெஸ்ட் நினைவுச் சின்னத்தை எரிக்கலாம் என நினைத்தார்கள் போலும். பொதுவான ஐரோப்பாவுக்காக நாங்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறோம். லிட்டர் கணக்கிலான ரத்தத்திற்கு மாற்றாக டீசல், பெட்ரோலைக் கொடுத்து சரிக்கட்ட முடியாது.

உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவார்கள். 9 நாட்களாக நாங்கள் இருளையும், கொடுமையையும் தாக்குப்பிடித்துள்ளோம். நாங்கள் ஒளியின் போராளிகள். ஐரோப்பிய வரலாறு இதை என்றும் நினைவுகொள்ளும், இவ்வாறு ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.

russia attack

நேட்டோ அமைப்பு தங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளாததற்கும், நோ ஃப்ளை ஜோனை அறிவிக்காததற்கும் ஜெலன்ஸ்கி முதன்முறை தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

ஏற்கெனவே அவர் தனது முந்தைய உரையில், உக்ரைனுடன் ரஷ்ய படையெடுப்பு முடிந்துபோவதில்லை. அடுத்ததாக எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளையும் ரஷ்யா குறிவைக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேட்டோ மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

newstm.in

Next Story
Share it