தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நடிகை சடலமாக மீட்பு..!
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நடிகை சடலமாக மீட்பு..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் டிபென்ஷி திவான்(23). நடிகையான இவர், ரிவாரி மாவட்டத்தில் உள்ள தும்ப ஹரி என்ற தன் சொந்த கிராமத்தில் உள்ள கால்வாயில் உறவினர்களுடன் குளிக்க சென்றார்.
கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் நிலைதடுமாறிய திவான் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற உறவினர்கள் முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், மீட்புப்படையினரும் பல மணி நேர தேடுதலுக்கு பின் நடிகை திவானை சடலமாக மீட்டனர்.
கால்வாயில் குளிக்கச் சென்ற நடிகை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஹரியானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

