Theme Check

4ஆவது மாடியில் இருந்து இளம்பெண்ணை தூக்கிவீசிய கொடூரம் !!

4ஆவது மாடியில் இருந்து இளம்பெண்ணை தூக்கிவீசிய கொடூரம் !!

4ஆவது மாடியில் இருந்து இளம்பெண்ணை தூக்கிவீசிய கொடூரம் !!
X

நவீனமயமான இன்றை காலக்கட்டத்தில் சமூக வலைதளங்கள் எவ்வளவு நன்மை அளிக்கிறதோ அதேஅளவுக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. அதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரித்திகா சிங்( 30) என்ற பெண் சமூக வலைதளத்தில் 44 ஆயிரம் போலோவர்களை கொண்டுள்ளார். பேஷன், உணவு மற்றும் பயண ஆலோசனைகளை வழங்கும் நிபுணர்களாக இருந்தார்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். இவர் தனது கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, முகநூல் மூலம் அறிமுகமானபிரோசாபாத்தைச் சேர்ந்த விபுல் அகர்வால் என்ற நபருடன் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் அராவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 4 வது மாடியில் வாழ்ந்து வந்தார்.

erg

இந்த நிலையில், 2018 இல் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு விபுலுடன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவருடன் வாழ தொடங்கினார். நேற்று ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் வெள்ளிக்கிழமை ரித்திகா சிங் பிளாட்டுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் அங்கு அவர்கள் விபுல் மற்றும் ரித்திகாவை தாக்க ஆரம்பித்தனர்.

விபுலை அவர்கள் குளியலறையில் வைத்து பூட்டினர், பின்னர் ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டி அவரை பால்கனியில் இருந்து தூக்கி வீசினர். இதில் ரத்த வெள்ளத்தில் ரித்திகாசிங் பலியனார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். இதை பார்த்த இரண்டு ஆண்கள் ஓடிவிட்டனர். ஆனால், ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it