Theme Check

ஓடும் ரயிலில் தனியாக போராடிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

ஓடும் ரயிலில் தனியாக போராடிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

ஓடும் ரயிலில் தனியாக போராடிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !
X

பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்ப எதிர்த்து போராடிய பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலதில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை, கொலை என பல வகைகளில் இக்குற்றங்கள் நடக்கின்றன. ஏன் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே பாலியல் வழக்கில் சிறை சென்றதும் நடந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ரயிலில் வந்துள்ளார். மகோபாவுக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

girl

வழியில் ஒரு நிலையத்தில் 30 வயது நபர் ஒருவர் ஏறியுள்ளார். அந்த பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லாத துணிச்சலில் இளம்பெண்ணை நெருங்கி தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். பின்னர் அவரிடம் அத்துமீறவும் முயன்றுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தப்பியோடிய போதும் துரத்தித் துரத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளார். ரயில் சென்றுக்கொண்டிருந்ததால், அவர் அடுத்த பெட்டிக்குள் ஓடியபோதும் அங்கும் பயணிகள் யாரும் இல்லை என்பதால் அவருக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை.

அந்த நபரின் பிடியில் சிக்கிப் போராடிய அப்பெண், அவரின் கையைக் கடித்துள்ளார். அதில் ரத்தக் காயம் அடைந்த அவர் ஆத்திரத்தின் உச்சியில் இளம்பெண்ணின் வயிற்றிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட முயன்றார். பெட்டியின் கதவு கைப்பிடியை பற்றித் தொங்கியபடி அப்பெண் உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது அவரின் கை மீது அந்த ஆசாமி உதைத்ததால், கை நழுவி ராஜ்நகர் என்ற இடத்தில் ரயிலில் இருந்து வெளியே விழுந்தார்.

girl

தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை ரயில்வே ஊழியர்கள் பார்த்து, மருத்துவமனையில் சேர்த்தனர். ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தை அடுத்து அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவியில் குற்றவாளி உருவப்படம் பதிவாகியுள்ளதால், அதன் அடிப்படையில் விரைவில் இக்கொடூரத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்படுவார் என்று ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it